பெருந்தோட்டக் கம்பனிகள் அடாவடி செய்கின்றன – விரைவில் முடிவு

கூட்டு ஒப்பந்தம் இன்மையாலேயே சில பெருந்தோட்டக் கம்பனிகள் அடாவடி செய்கின்றன. இப்பிரச்சினைக்கும் விரைவில் முடிவு காணப்படும். அதற்கான பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

கொட்டகலையில் இன்று (21.10.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” உள்ளாட்சிமன்றத் தேர்தலின் போது சுழற்சிமுறையில் பதவி மாற்றம் இடம்பெறும் என எமது உறுப்பினர்களுக்கு மறைந்த தலைவர் அறிவித்திருந்தார். அந்தவகையில் கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவராக இருந்த சுரேசுக்கு பதிலாக பாலா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் மேலும் சில சபைகளிலும் மாற்றம் வரும்.

அட்டன் நகரசபை தலைவரை பதவி விலகுமாறு நாம் பணிக்கவில்லை. அதற்கான தேவையும் எழவில்லை. அவர் அப்பதவியில் நீடிப்பார்.

உரப்பிரச்சினை தொடர்பில் நாம் ஜனாதிபதி, பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பெருந்தோட்டத்துறை தொடர்பான விடயங்களுக்கு உரம் கிடைக்கும்.

அதேவேளை, சில தோட்டங்கள் இன்று ஆயிரம் ரூபாவை வழங்குகின்றன. சில தோட்டங்கள் வழங்குவதில்லை. கூட்ட ஒப்பந்தம் இல்லாமை இதற்கு பிரதான காரணமாகும். இது மக்களுக்கும் தெரியும்.

கூட்டு ஒப்பந்தம் இருந்தபோது இ.தொ.காவின் கட்டுப்பாட்டின்கீழ் நடவடிக்கைகள் இடம்பெற்றன. இன்று அது இல்லாததால் சில கம்பனிகள் அடாவடியாக செயற்படுகின்றன. கூட்டு ஒப்பந்தத்தை அடிமை சாசனம் என விமர்சித்த தொழிற்சங்க பிரமுகர்களே, அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். ” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles