“நாட்டில் 11 மாவட்டங்கள் பெருந்தோட்டகளாக காணப்படுகின்றன. அந்த காணிகள் அனைத்தையும் 22 கம்பனிகளே நிர்வகித்துவருகின்றன. என்றாலும் பெருந்தோட்ட மக்களின் மனித உரிமையை மீறியே அந்தக் கம்பனிகள் நிர்வகித்து வருகின்றன. அதனால் இதற்கு எதிராக புதிய சட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும்.”
– இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பி னர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நீதித்துறை சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையி லேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரி விக்கையில் –
“நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு இருக்கும் பொதுவான அனைத்து சட்டங்களும் மலையக சமூகத்துக்கும் வழங்க வேண்டும் அத்துடன் உழைப் புக்கு ஏற்ற சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
ஜனாதிபதியின் உத்தரவையும் மீறி பெருந்தோட்ட கம்பனிகள் செயற்படுகின்றன. சம்பள அதிகரிப்புக்கு எதிராக பெருந்தோட்ட கம்பனிகள் நீதிமன்றம் சென்று, தற்போது சம்பள அதிகரிப்புக்கு தடை உத்தரவையும் பெற்றுள்ளன. இது உலகில் எங்கும் இடம்பெறாத ஒன் றாகவே பார்க்கிறேன். இது மலையக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அநீதி யாகும்.
மேலும் பெருந்தோட்டங்களும் மேற்கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம் இந்த நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்படுகிறது. நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது.
25 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் பெருந் தோட்டங்களாக இருக்கின்றன. அதிக மான காணிகள் அந்த பெருந்தோட்ட கம்பனிகளுக்கு இருக்கின்றன. 22 கம்பனிகள் அந்த மக்களுடைய மனித உரிமையை மீறி அங்கு நிர்வாகம் நடத்தி வருகின்றன.
அதனால் இதற்கு எதிராக புதிய சட்டம் ஒன்றை ஏற்படுத்த அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண் டும். பெருந்தோட்டங்களை கிராமங்க ளாக்கும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பிப்பதாக தெரிவித்திருப்பதை சட்டமாக்கி வர்த்தமானியில் வெளியிட் டால் எமது மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய நிலைமை ஏற்படும். அதனால் நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு இருந்து வரும் அனைத்து சட்டங்களும் மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அதற்கான நட வடிக்கைகளை அரசாங்கம் முன்னெ டுக்க வேண்டும்.”- என்றார்.
]