பெரும்போகத்துக்கு தேவையான உரங்களை விவசாயிகளுக்கு தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இம்முறை பெரும்போகத்தை வெற்றியடையச் செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் களையப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ரணில் விக்கிரமசிங்க இன்று (20) காலை வடமத்திய மாவட்ட பிரதம சங்கநாயக கலாநிதி வணக்கத்துக்குரிய பல்லேகம சிறினிவாச தேரரை நேரில் சென்று சந்தித்ததன் பின்னர் தேரருடனான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை வரலாற்று சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதிக்கு சென்று ஆசி பெற்றார்.
அங்கு மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.
நாயக்க தேரருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி மேலும் கருத்துத் தெரிவிக்கையில், விவசாய பொருளாதாரத்தில் அதிக கவனம் செலுத்தி பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
மகா விகாரையின் அகழ்வுப் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மியன்மார், பர்மா போன்ற நாடுகளில் இருந்து பெருமளவிலான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். சந்திரசேன, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க, ஷெஹான் சேமசிங்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க,
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவன் விஜயவர்தன, முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, அனோமா கமகே. , எஸ்.டி. சேமசிங்க, வடமத்திய மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.