பெற்றோல் விநியோகம் ஆரம்பம்

எரிபொருள் நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படுவதை தொடர்ந்து, இன்று காலை முதல் எரிபொருள் நிலையங்களுக்கு அருகே நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து காணப்படுகின்றன.

நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பலில் இருந்து தற்போது எரிபொருள் தரையிறக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த இரண்டு நாட்களாக பெற்றோல் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படாத நிலையிலும் மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று காலையில் பல எரிபொருள் நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையை வந்தடைந்த டீசல் கப்பலில் இருந்து எரிபொருள் இறக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், டீசல் விநியோகம் தொடரும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles