பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதுடைய இளைஞன் ஒருவர் பெலியத்த பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியைச் சந்தேக நபர், கம்புறுபிட்டியவில் உள்ள தனது உறவினர் வீட்டில் மறைத்து வைத்து பின்னர் காலிக்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அபே ஜனபலவேகய கட்சியின் தலைவர் உட்பட ஐவர் கடந்த 22 ஆம் திகதி பெலியத்த பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 10 இற்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய முன்னாள் கடற்படை சிப்பாய் ஒருவர் வெளிநாடு தப்பியோடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.










