பெலியத்த பகுதியில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலையாளிகள் பயணித்த ஜீப்பிற்கு , குறித்த நபரே போலி ஆவணங்களை தயாரித்து வழங்கியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 57 வயதான அவர் நாரஹேன்பிட்டி, கிருலப்பனை வீதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அபே ஜனபலவேகய கட்சியின் தலைவர் உட்பட ஐவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் இதுவரை 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.