பெலியத்த படுகொலை – மேலும் ஒருவர் கைது!

பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் நேற்று (04) ஹபராதுவயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டுதம்பே, ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை 10 இற்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் வெளிநாடு தப்பியோடியுள்ளார்.

Related Articles

Latest Articles