சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும், பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் 25 சதவீதமான பேக்கரிகளே ‘கேஸ்’ பயன்படுத்துகின்றன. எனவே, கேஸ் விலை குறைந்ததால் உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது எனவும் மேற்படி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை, கேஸ் விலை அதிகரிக்கும்போது விலை அதிகரிப்பை செய்யும் பேக்கரிகள், விலை குறையும்போது மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்கின்றன என்று நுகர்வோர் அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
