பேரழிவில் இருந்து ஜப்பான் மீண்டதுபோல இலங்கையும் மீண்டெழும்: அமைச்சர் நம்பிக்கை!

உலகப்போரின்போது ஜப்பான்மீது அணுகுண்டுவீசப்பட்டது. முற்றாக அழிந்த அந்நாடு மீண்டெழுந்தது. அவ்வாறான அணுகுமுறையை நாமும் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

“ பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிகளை வழங்கிய உலக நாடுகளுக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். மீட்பு பணி, மருத்து சேவை, விநியோகம் என சகல வழிகளிலும் உதவிகள் கிடைக்கப்பெற்றன.

அடுத்தக்கட்டமாக மீள் கட்டுமான பணிகளை செய்ய வேண்டியுள்ளது. இதற்கான உதவிகளும் கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

சுனாமி காலத்தில் இருந்த அரசாங்கம்போன்றது அல்ல தற்போதைய அரசாங்கம். சர்வதேச நாடுகளுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அதனால்தான் உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் நாட்டுக்காக உதவிகளை வழங்கிவருகின்றன. உதவிகள் முறையாக முகாமைத்துவம் செய்யப்படுகின்றன.

ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட பின்னர் அந்நாடு மீண்டெழுந்தது. மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டனர். நாமும் அவ்வாறு செயல்பட வேண்டும். எதிரணிகளும் ஒத்துழைக்க வேண்டும்.இலங்கை நிச்சயம் மீண்டெழும் என்ற நம்பிக்கை உள்ளது.” – எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles