பேராதனை பல்கலை மாணவர்கள் ஐவருக்கு 2 வாரகால வகுப்பு தடை

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பேருக்கு இரண்டு வாரம் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரகால தடை உத்தரவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த மாணவர் தலைவருக்கு காலம் குறிப்பிடப்படாத தடை உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக ஒருங்கிணைந்த சுகாதார கற்கைநெறிப் பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் 70 பேர் பேராதனைக்கு சுற்றுலா வந்ததோடு ஹந்தானை மலையையும், மகாவலி கங்கையையும் பார்வையிட்டு இரவு பேராதனைப் பல்கலைக்கழக ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார பீட சிற்றூண்டிச்சாலையில் தங்கியுள்ளனர். இதுதொடர்பில் ஏற்கனவே பேராதனை மாணவர்கள் பீடாதிபதியிடம் முன் அனுமதி கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் அதை மீறி தங்கவைக்கப்பட்டமையால் இதில் ஈடுபட்ட ஐந்து மாணவர்களை இரண்டுவாரம் ஒத்திவைக்கப்ட்ட இரண்டு வார பல்கலைக்கழக தடையுத்தரவு பீட ஒழுக்காற்று குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து புதன்கிழமை இப்பீட மாணவர்கள் செனட் கட்டடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ததோடு உபவேந்தரை சந்திக்க நேரம் கோரியுள்ளனர். உபவேந்தர் மறுத்தமையால் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் உபவேந்தருக்கு எதிராக தகாத வார்த்தைகளால் உரையாற்றியுள்ளனர்.

இதனால் இப்பீடத்தின் மாணவர் தலைவருக்கு காலம் குறிப்பிடப்படாத தடை உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles