பேஸ்புக்கில் பிரபாகரனின் படம்: கைதான இளைஞருக்கு விளக்கமறியல்

தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டிருந்தார் என்ற குற்றச்சாடின் கீழ் கைதான இளைஞரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ். இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மேற்படி இளைஞரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கைது செய்யப்பட்ட இளைஞர் சார்பில் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் வழக்கில் ஆஜரானார்.

Related Articles

Latest Articles