பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தாலோ அல்லது அவற்றை கொள்ளையடித்தாலோ, அத்தகைய செயலில் ஈடுபடும் நபர்கள்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் அதிகாரம் முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சாலேயே படையினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு சட்டமும் நாளை காலை 7 மணிவரை அமுலில் உள்ளது.
