ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக தயாசிறி ஜயசேகர மீண்டும் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
கட்சி தலைமையகத்தில் இன்று பணிகளை ஆரம்பித்தார்.
தயாசிறி ஜயசேகர வெளிநாடு சென்றிருந்த நிலையில், அந்த பதவிக்கான பணிகளை கவனிக்க சரத் ஏக்கநாயக்கவை நியமிக்க கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
