லிந்துலையில் நீரில் மூழ்கி மாணவன் மாயம்: 2ஆவது நாளாக தொடரும் தேடுதல்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, அக்கரகந்த – ஆக்ரா ஆற்றில் மூழ்கி காணாமல்போன சிறுவனை தேடும் பணி இன்று (14) இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.

அக்ரகந்த, ஆக்ரா ஆற்றுக்குக் குளிப்பதற்காகச் சென்ற மாணவர்களில் ஒருவரே நேற்று மாலை நீரில் மூழ்கி இவ்வாறு காணாமல்போயிருந்தார். தரம் 10 இல் கல்வி பயிலும் பரமநாதன் கிசோத் என்ற மாணவனே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாகக் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனையடுத்து, லிந்துலை பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து நேற்று மாலை முதல் ஆற்றில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். எனினும், ஆற்றில் நீர்வரத்து அதிகமாகக் காணப்பட்டமையால் நேற்றைய தேடுதல் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இன்று சுழியோடிகளும் வந்து, இரண்டாவது நாளாக தேடுதல் நடவக்கை இடம்பெறுகின்றது.

கௌசல்யா

Related Articles

Latest Articles