மாகாண சபைகள் தேர்தல் முறைமை தொடர்பான குழுவின் கால அவகாசத்தை நீடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். மாகாண சபை தேர்தலை நடத்துவதைத் தடுப்பதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் கால அவகாசத்தை நீடிப்பது என்பது மக்களுக்கு மாகாண சபை தேர்தலை நடத்தும் வாய்ப்பை இழக்கச் செய்வதாகும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்வேளையில் நிகழ வேண்டியது இக்குழுவின் கால அவகாசத்தை நீடிப்பது அல்ல, மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதே ஆகும். அரசாங்கம் மக்களுக்கு பயப்படவில்லை என்றால் இந்த மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். பழைய முறையின் கீழாவது மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கோட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மேலும், மாகாண சபை தேர்தலை ஒத்திவைப்பதற்காக இக்குழுவின் கால அவகாசத்தை நீடிப்பது அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக அமைந்து காணப்படுகின்றது. நாட்டு மக்களின் இறைமையை இது மீறுவதால், ஜனநாயகத்திற்கு எதிரான இந்நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதுடன், எதிர்க்கட்சி இதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.










