பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் களமிறங்கும் ஐ.தே.க.!

பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடத் தயாராகுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் நிர்வாகக் குழுவிடம் நேற்று (22) அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அறிவித்த பின்னர், ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இக்கூட்டத்தின்போதே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேட்புமனுக்களை தயாரிப்பதற்கு புதிதாக ஐவருக்கு வாய்ப்பு வழங்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்தும் ஆராயப்பட்டன. யானை சின்னத்தில் களமிறங்காமையும் பின்னடைவுக்கு ஒரு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles