பொதுவேட்பாளராக களமிறங்குவது குறித்து விஜயதாச ராஜபக்ச விடுத்துள்ள அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் தொடர்பில் இன்னும் ஒரிரு வாரங்களுக்குள் தீர்மானமொன்று எடுக்கப்படும் – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு பல தரப்பினரும் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், அதேபோல மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத்தலைவர்கள் ஆகியோரும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் சிந்தித்து, நன்கு ஆராய்ந்து அடுத்த சில வாரங்களில் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளேன்.
எமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள்மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, கட்சியை பார்த்து வாக்களிப்பதைவிட, நபர்கள் மற்றும் கொள்கைகளுக்கு முன்னுரிமையளித்தே இனி வாக்களிப்பார்கள்.” – என்றார்.

Related Articles

Latest Articles