தாய்நாட்டை பாதுகாக்க எதிரணிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கூறியவை வருமாறு,
” நாட்டு மக்களுக்கு தலைமைத்துவம் அவசியம். எனவே, நாம் கூட்டு எதிரணியாக செயற்படுவோம். முதலில் ஒன்றிணைவோம். அதன்பின்னர் பயணத்தை தீர்மானிக்கலாம்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகப்போகின்றது. ஆனால் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கடிதமொன்றை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் பிரதிநிதி இல்லை. ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க முடியவில்லை.
பதவியைவிட தாய்நாடுதான் முக்கியம் என்பதை உணர்ந்து அரசாங்க ஊழியர்களும், படை அதிகாரிகளும் செயற்பட வேண்டும்.” – என்றார்.