பொது மனுக்கள் குழுவின் தலைவராக காமினி லொக்குகே தெரிவு

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அவரது பெயர் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவால் பிரேரிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமார அவர்களினால் ஆமோதிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் இன்று (24) கூடிய பொது மனுக்கள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டத்தில் இந்த தெரிவு இடம்பெற்றது.
இந்த கூட்டத்துக்கு அதன் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், தேனுக விதானகமகே, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், திலிப் வெதஆராச்சி, காதர் மஸ்தான், அஷோக பிரியந்த, முஜிபுர் ரஹ்மான், குலசிங்கம் திலீபன், நிபுண ரணவக்க, கீதா குமாரசிங்க மற்றும் ராஜிகா விக்ரமசிங்க ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை, பொது மனுக்கள் பற்றிய குழுவினால் கடந்த பாராளுமன்றத்தின் போது அவதானம் செலுத்தப்பட்ட பொது மனுக்கள் கோவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles