பொன்சேகா அவுட்: புதிய தவிசாளராக கபீர் ஹாசீம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளில் இருந்தும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா நீக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.

கட்சி தலைமைமீதான விமர்சனம், கட்சி தீர்மானத்துக்கு எதிரான செயற்பாடுகள், ஆளுங்கட்சியுடனான உறவு உள்ளிட்ட காரணங்களைக் கருத்திற்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருந்த களனி தொகுதியின் புதிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா நியமிக்கப்படவுள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி ரணிலை ஆதரித்து எதிர்வரும் 21 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தின்போது ரணிலுடன் பொன்சேகா மேடையேறவுள்ளார் என தெரியவருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக கபீர் ஹாசீம் நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles