பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு – அமெரிக்க பேராசிரியர்கள் மூவருக்கு பகிர்ந்தளிப்பு

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவில் பணிபுரியும் மூன்று பேராசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சைன்சஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆல்பிரட் நோபலின் நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசினை இந்த ஆண்டு டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகியோருக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 1967 இல் பிறந்த டேரன் அசெமோக்லு, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸ், யுகேவில் இருந்து 1992ம் ஆண்டு PhD முடித்தவர். அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ்-ல் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர்.

1963ல் இங்கிலாந்தின் ஷெஃபீல்டில் பிறந்த சைமன் ஜான்சன், அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ்-ல் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் 1989ம் ஆண்டு PhD முடித்தவர். தற்போது தான் படித்த அதே கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

1960ல் பிறந்த ஜேம்ஸ் ஏ. ராபின்சன், 1993 இல் அமெரிக்காவின் நியூ ஹெவன்-ல் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் PhD முடித்தவர். தற்போது, சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் இருக்கிறார்.

“நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் அவை எவ்வாறு செழிப்பைப் பாதிக்கின்றன” என்பது பற்றி ஆய்வுகளுக்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நாடுகளுக்கிடையேயான செழிப்பு வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள இவர்களின் ஆய்வு உதவியுள்ளதாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சைன்சஸ் தெரிவித்துள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் சார்பில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளருமான ஆல்ஃபிரட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க அவரது நினைவாக ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு விருதுக்கும் சுமார் 10 லட்சம் டாலர்கள் (ரூ.8.30 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. நாளை இலக்கியத்துக்கான நோபல் பரிசும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அமைதிக்கான நோபல் பரிசும், அக்.14-ம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளன. நோபல் வெற்றியாளர்களுக்கு டிசம்பர் மாதம் 1ம் தேதி ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளில் பரிசுகள் வழங்கப்படும்.

 

Related Articles

Latest Articles