பொருளாதார சவால்களை இலங்கை மக்கள் வெற்றிகொள்வர் – ஐஸ்லாந்து ஜனாதிபதி நம்பிக்கை

சமூக ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் இலங்கை மக்கள் பொருளாதார சவால்களை மிகவும் வெற்றிகரமாக கையாள்வார்களென ஐஸ்லாந்து ஜனாதிபதி Guoni Th. Johannesson நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை – ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான நட்புறவு மேலும் பலப்படுத்தப்படுமென்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஐஸ்லாந்து ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலுள்ள நட்புறவை தற்போது மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த உறவு எதிர்காலத்தில் இலங்கைக்கும் ஐஸ்லாந்துக்கும் மேலும் பல நன்மைகளை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை பாதித்துள்ள உயர் பணவீக்கம் பற்றி தனது கருத்தை வெளியிட்ட அவர், ஐஸ்லாந்துக்கும் அது பற்றிய சிறந்த அனுபவம் இருப்பதனால் அது இரு நாடுகளுக்குமான பொது பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், அண்மையில் எதிர்நோக்கிய உலகலாவிய தொற்று நோய் மற்றும் சுற்றாடல் அச்சுறுத்தல் ஆகியவற்றின்போது அனைவரும் ஒன்றாக இணைந்து முகம் கொடுக்க வேண்டுமென்றும் அதற்காக ஒவ்வொருவரும் தமது பங்கை மிகச் சிறப்பாக முன்னெடுக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்த தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்த ஐஸ்லாந்து ஜனாதிபதி, இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய தான் வாழ்த்து தெரிவிப்பதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles