பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் கைவிலங்குடன் தப்பியோட்டம்!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றை தன்னிடம் வைத்திருந்தமை தொடர்பில் சந்தேகத்தில் மித்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் கைவிலங்குடன் தப்பிச் சென்றுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பியோடிய நபர் மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெபொக்காவ மேற்கு பிரதேசத்தில் வசிப்பவராவார்.

கடந்த 27ஆம் திகதி, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கைக்குண்டுடன் இவரை கைது செய்தது.

அதன் பின்னர், நீதிமன்றில் பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் சந்தேக நபர் மித்தெனிய பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவர் தப்பிச் சென்றுள்ளார்.

Related Articles

Latest Articles