பொலிஸ்மா அதிபரை பதவிநீக்கும் பிரேரணைமீது 8 ஆம் திகதி வாக்கெடுப்பு!

“பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவிநீக்கம் செய்யகோரும் பிரேரணை எதிர்வரும் 8 அல்லது 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும்.” என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபரை பதவி நீக்ககோரும் பிரேரணை, 115 எம்.பிக்களின் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் விளக்கமளித்தார்.

இதன்போது அவர் கூறியவை வருமாறு,

” பிரேரணை முதலில் நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் இடம்பெறும். ஐந்து நாட்களுக்கு பிறகு ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்படும். அதன்பின்னர் நாடாளுமன்றம் கூடும் முதல் சந்தர்ப்பத்தில் அதாவது ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு 113 வாக்குகள் தேவை.

அதன்பின்னர் மூவரடங்கிய விசாரணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும். அந்த குழுவின் பரிந்துரைக்கமைய, பதவி நீக்ககோரும் பிரேரணை மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அதற்கும் 113 எம்.பிக்களின் ஆதரவு தேவை.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles