தியத்தலாவ பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரியின் மோட்டார் சைக்கிளை எரித்து நாசமாக்கினார் எனக் கூறப்படும் நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் 12 வருடங்கள் இரணுவத்தில் சேவையாற்றிய பின்னர் அதிலிருந்து இருந்து விலகி தற்போது கல்கந்த தியத்தலாவ பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்.
தியத்தலாவ நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளே நேற்று முன்தினம் இரவு திருடப்பட்டு, தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.
ராமு தனராஜா
