பொலிஸ் சேவையில் 34 வருடங்களை பூர்த்தி செய்துள்ள இராகலை பொலிஸ் நிலைய பொலிஸ் சார்ஜண்ட் சமயன் செல்லதுரை (26) கடமையிலிருந்து ஓய்வு பெற்றார்.
1990ஆம் ஆண்டு கண்டி அஸ்கிரிய பொலிஸ் பயிற்சி கல்லூரியில், பொலிஸ் பயிற்சியில் இணைந்து கொண்ட இவர், பயிற்சியின் பின்னர் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் உப பொலிஸ் கான்ஸ்டபிளாக பதவி வகித்தார்.
இதன் பின்னர் நுவரெலியா,இராகலை,யாழ்.நெடுந்தீவு, திம்புல-பத்தனை,மட்டகளப்பு அகிய பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் கான்ஸ்டபிளாகவும் இவர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
இவர், 34 வருடங்கள் பொலிஸ் சேவையாற்றிய நிலையில் சேவையிலிருந்து (26) நேற்று ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.