பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மற்றும் அமைச்சின் பிரதிநிதிகளுடன் LGBTQ சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் IGP ஆகியோருக்கு இடையில் வெள்ளிக்கிழமை (9) பொலிஸ் தலைமையகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
LGBTQ சமூகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் பொலிஸாரைக் கையாளும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளைக் கண்டறிவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
