டிக்கோயா, போடைஸ் பகுதியில் 12ஆவது தடைவையாகவும் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளன. இதனால் சிறார்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போடைஸ் பகுதியில் நேற்று மாலை முதல் கடும் மழை பெய்துவருவதால் அப்பகுதியில் உள்ள போடைஸ் ஆறு பெருக்கெடுத்தது. இதனால் ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது. 42 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கைக் குழந்தைகள் உள்ள தாய்மார்கள் மற்றும் முதியர்வர்கள் வீட்டிலிருந்து வெளியேறமுடியாமல் இரவில் தவித்தனர்.
இந்த ஆற்றின் வெள்ள பல பிரதேச பெருக்கெடுத்ததன் காரணமாக இந்த பிரதேசத்தில் உள்ள விவசாய நிலங்கள் சுய தொழில் நிலையங்கள் காளான் உற்பத்தி நிலையங்கள் ஆகியன பாதிக்கப்பட்டுள்ளன.
கடும் காற்று காரணமாக டிக்கோயா ஹட்டன் போடைஸ் உள்ளிட்ட பல பிரதேசங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெள்ளம் ஏற்பட்டு வீடுகள் பாதிக்கப்பட்ட போது இந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்த அரசியல் தலைவர் ஒருவர் ஆற்றினை அகலப்படுத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்த போதிலும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறித்த பிரதேசத்தில் சிறிய அளவில் மழை பெய்தாலும் பல வீடுகளுக்கு வெள்ள புகுவதாகவும் இதனால் இப்பிரதேச மக்கள் அடிக்கடி பாதிக்கப்படுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
கே.சுந்தரலிங்கம், ஹட்டன்
