பயணக் கட்டுப்பாட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஹட்டன், போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் சுமார் 150 குடும்பங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த நிவாரணத் திட்டத்துக்கான நிதியுதவியை கொழும்பிலுள்ள வர்த்தகரான போடைஸ் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் பிரசாந்த வழங்கியுள்ளார்.
நிவாரணத் திட்டத்தை முன்னெடுத்த இளைஞர்களுக்கும், நிதி பங்களிப்பு வழங்கியவர்களுக்கும் பயன்பெற்றவர்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.
மேற்படி வர்த்தகரின் நிதிப்பங்களிப்புடன் அண்மையில் தெற்கு மடம்கும்புர தோட்டத்திலும் நிவாரணத் திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.