போதைக்கு அடிமையான 742 பேர் யாழில் அடையாளம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) மாத்திரம் உயிர்கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையான 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது முன்னைய ஆண்டுகளை விட பலமடங்கு அதிகம் என்று மருத்துவத்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நடத்தப்பட்ட சிகிச்சைகளின் மாத்திரமே 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 20 தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்ட வயதுப் பிரிவினரே அதிகம்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானவர்கள் உயிர்கொல்லி ஹெரோய்னுக்கு அடிமையானவர்கள். இவர்களில் உயிர்கொல்லி ஐஸ் மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர்களும் உள்ளனர். இவை மூன்றையும் பயன்படுத்துவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இவ்வாறு போதைப்பொருள் பாவனையாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானவர்கள் மூக்கு மூலமாக நுகர்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக ஊசி மூலம் அதனை நுகர்கின்றனர்.

உயிர்கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு நுரையீரல் அழற்சி ஏற்பட்டு உயிரிழக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 15 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles