“தேசிய மக்கள் சக்தியென்பது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமாகும். கடந்த இரு வருடங்களில் மக்களின் நலன் கருதியே நாம் முடிவுகளை எடுத்துள்ளோம்.”- என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
“ மலையக மக்கள் தொடர்பில் நாம் விசேட அவதானம் செலுத்தியுள்ளோம். அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கிவருகின்றோம். முன்பு இருந்ததைவிடவும் மலையக மக்கள் மத்தியில் எமக்கான ஆதரவு- ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது.”- எனவும் அவர் கூறினார்.










