போதைப்பொருட்கள், கத்திகளுடன் பிபிலையில் இளைஞன் கைது!

பிபிலை ரதுபஸ்கெடிய பகுதியில் நேற்று மாலை (15)போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிலை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் 36 வயதுடைய ரதுபஸ்கெடிய பிபிலை பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

பிபிலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்தியள்ளனர்.

இதன்போது 01.ஹெரோயின்

5 கிராம் 500 மில்லிகிராம்

02.ஐஸ் 2 கிராம் 20 மில்லிகிராம்

03.ஹுஸ் 730 மில்லிகிராம்

04.Neurovan ரக போதை மாத்திரைகள் 27

05.தடைசெய்யப்பட்ட கத்திகள் 03

ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பிபிலை பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை பிபிலை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிபிலை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles