போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலையேற சென்ற மூவர் கைது!

சிவனொளிபாத மலை யாத்திரையின் போது ஹட்டன், நல்லதண்ணி ஊடாகப் போதைப்பொருள் கொண்டு வரும் யாத்திரிகர்களைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று ஹட்டன் பொலிஸ் பிரிவின் இலஞ்ச ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹட்டன் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஸ்டூவர்ட் என்ற போதைப்பொருள் தொடர்பில் விசேட பயிற்சி பெற்ற மோப்ப நாயைப் பயன்படுத்தி இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நேற்று (10) ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பொலிஸ் வீதித் தடை வழியாக சிவனொளிபாதமலைக்குச் சென்ற பஸ்கள் மற்றும் பிற வாகனங்களைச் சோதனையிட்ட போது கஞ்சா மற்றும் சட்டவிரோதமான முறையில் புகைத்தல் பொருட்களை வைத்திருந்த மூன்று சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுகளைக் கொண்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் ஹட்டன் நீதிமன்ற நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related Articles

Latest Articles