நச்சு போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்திய 300ற்கு மேற்பட்ட சாரதிகள் கடந்த 15 நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் டபிள்யூ.பீ.ஜே.சேனாதீர தெரிவித்தார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 7500இற்கு மேற்பட்ட சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மாஅதிபர் கூறினார்.
போதைப்பொருள் மற்றும் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்துவதினால் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் நடமாடும் இரசாயன ஆய்வுகூடங்களில் போதைப்பொருள் பயன்படுத்திய சாரதிகளின் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் டபிள்யூ.பீ.ஜே.சேனாதீர தெரிவித்தார்.










