போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமனதிஸ்ஸகம பகுதியில் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பசறை ஆககரத்தன்ன பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடி படையின் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே 60 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், 23 வயதுடைய இளஞர் ஒருவரும் விஷேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பதுளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பதுளை பொலிஸார் நாளைய தினம் பதுளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles