போதை மாத்திரைகளுடன் யாழில் நால்வர் கைது!

ஆயிரத்துக்கு மேற்பட்ட போதைமாத்திரை மற்றும் வாளுடன் நால்வர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நால்வரே யாழ் மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினர் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாத்திரைகளும் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட 25 ,24 வயதுக்குட்பட்ட இளைஞர்களை மேலதிக விசாரணையின் பின்னர் நாளை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles