” போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நகர்வுகளை அரசு உடன் தடுத்து நிறுத்த வேண்டும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பி. வலியுறுத்தினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
அத்துடன், தொழிற்சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜோசப் ஸ்டாலின்மீது கை வைத்தால், ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை இல்லாமல் போகலாம் என அன்று எச்சரிக்கை விடுத்த ரணில் விக்கிரமசிங்க, இன்று மாறுபட்ட விதத்தில் செயற்பட முற்படக்கூடாது எனவும் இராதாகிருஷ்ணன் கூறினார்.
