போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் – இதுவரை 16 பேர் கைது

காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டிப் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் ஹோகந்தர பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எதுல் கோட்டை பகுதியைச் சேர்ந்த 43 வயதானவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் பெண் ஒருவர் உட்பட 16 பேர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles