போராட்டத்தை குழப்பவந்தாரா வேலுகுமார்? புசல்லாவை சம்பவம் குறித்து இதொகா கூறுவது என்ன?

“ நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்மீது தாக்குதல் நடத்துவதற்கு முற்படவில்லை. சம்பள உயர்வுக்கான போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு அவர் வந்திருந்ததால் மக்கள் கொந்தளிப்படைந்தனர். அதனைக் கட்டுப்படுத்தவே நான் சென்றிருந்தேன்.”

இவ்வாறு இதொகாவின் உப செயலாளரான செல்லமுத்து தெரிவித்தார்.

புசல்லாவை நகரில் இன்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் தமது தரப்பு விளக்கத்தை வழங்குகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“சம்பள உயர்வு கிடைப்பதற்கு முன்னரே அது கிடைக்காது எனக்கூறி கம்பனிகளுக்கு சார்பாகவும், இதொகாவை வேண்டுமென்றே வேலுகுமார் விமர்சித்துவருகின்றார். கம்பனிகளுக்கு சார்பாக செயற்படும்அவர்மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

புசல்லாவையில் அடிக்கல் நாட்டப்பட்ட இடம் வேறு, அவர் வந்த இடம் வேறு. போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு அவர் வந்ததால் மக்கள் கொதிப்படைந்தனர். இதனையடுத்து மக்களை கட்டுப்படுத்தவே நான் சென்றிருந்தேன்.

தாக்குதல் முயற்சி எனக் கூறப்படுவதெல்லாம் அப்பட்டமான பொய். போராட்டம் நடைபெறுகின்றது என தெரிந்தும் அவர், ஏன் அந்தப்பகுதிக்கு வரவேண்டும், குழப்பம் விளைவிக்கவா வந்தார் என்ற சந்தேகம் எழுகின்றது.” – எனவும் செல்லமுத்து குறிப்பிட்டுள்ளார்;.

Related Articles

Latest Articles