‘ போராட்டத்தை கைவிடவேண்டாம்’ – மக்களிடம் அநுர அவசர கோரிக்கை

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் நிறுத்தப்படக்கூடாது.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று (8) விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு இந்த அரசிடம் தீர்வு திட்டம் இல்லை. ஜனாதிபதி பதவி விலக வேண்டும். அதன்பின்னர் அரசு பதவி விலக வேண்டும். இவ்விரு விடயங்களும் நடந்தால் அடுத்த கட்டம் தொடர்பில் விவாதிக்க நாம் தயார். ஆனால் ஜனாதிபதி பதவி விலகமாட்டார் என ஆளுங்கட்சியினர் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.

அதாவது, ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என வலியுறுத்தியே மக்கள் போராடுகின்றனர். அந்த மக்கள் கோரிக்கை ஏற்கப்படாது என்பதே அரசின் நிலைப்பாடாக உள்ளது. எனவே, தமது இலக்கை அடையும்வரை மக்கள் போராட்டத்தை கைவிடக்கூடாது. மக்கள் போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். ஜே.வி.பியாலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles