“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட, கண் முன்னாலே ஒப்படைக்கப்பட்ட அத்தனை பேரும் படுகொலை செய்யப்பட்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பதனை இந்த அரசாங்கம் ஒப்புக்கொள்கின்றதா? அதனை அமைச்சர் வெளிப்படையாக கூற வேண்டும்” என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இதற்கான நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.
.
“நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிரோடு இல்லை என்று அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட, கண் முன்னாலே ஒப்படைக்கப்பட்ட அத்தனை பேரும் படுகொலை செய்யப்பட்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பதனை இந்த அரசாங்கம் ஒப்புக் கொள்கின்றதா? அதனை அமைச்சர் வெளிப்படையாக கூற வேண்டும்” என்று செல்வம் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார்.










