போர்ப்ஸ் ஆசியாவின் 200 ‘Best Under a Billion’ பட்டியலில் ஒரேயொரு இலங்கை நிறுவனமாக BPPL Holding மாத்திரமே பட்டியலிடப்பட்டுள்ளது

BPPL Holdings PLC, தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய தூரிகை உற்பத்தியாளர்களில் ஒருவரும் மற்றும் இலங்கையின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மீள்சுழற்சி இயந்திரங்களைக் கொண்ட நிறுவனமும் மீள்சுழற்சி செய்யப்பட்ட PET பிளாஸ்டிக் துண்டுகளிலிருந்து நேரடியாக பாலியஸ்டர் நூலை உருவாக்கும் திறன் கொண்ட உலகின் இரண்டு ஆலைகளில் ஒன்றைக் கொண்டுள்ள BPPL Holdings PLC, போர்ப்ஸ் ஆசியாவின் 200 ‘Best Underr a Billion’ பட்டியலிடப்பட்ட ஒரேயொரு இலங்கை நிறுவனமாக இடம்பிடித்துள்ளது.

Forbes இந்த ஆண்டு ஆசியா-பசுபிக் பிராந்தியத்தில் 20,000க்கும் மேற்பட்ட பொது வர்த்தக நிறுவனங்களை மதிப்பீடு செய்தது, ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான வருவாய் மற்றும் நிலையான மேல் மற்றும் கீழ்நிலை வளர்ச்சியைக் கொண்ட 200 நிறுவனங்கள் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்பட்டன.

நிறுவனங்கள் தங்கள் ஒட்டுமொத்த சாதனை பதிவை இணைத்ததன் மூலம் பெற்ற ஒரு மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. மிக சமீபத்திய நிதி ஆண்டு மற்றும் மூன்று வருட காலப்பகுதியிலும் கடன், விற்பனை மற்றும் ஒரு பங்குக்கான வருவாய்-வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் Equity மீதான வலுவான ஒன்று மற்றும் ஐந்து வருட சராசரி வருமானம் ஆகியவை இந்த மதிப்பீட்டில் அடங்கும்.

அளவுகோல்களைத் தவிர, தரமான காட்சிப்படுத்தல்களும் பயன்படுத்தப்பட்டன.

இலங்கையின் கழிவு நிர்வகிப்பு பிரச்சினைக்கு ஒரு தீர்வை வழங்கும் நிலையான வணிகத்தில் முன்னணியில் உள்ள இந்தக் குழு, நாள் ஒன்றுக்கு 360,000 PET பாட்டில்களை பாலியஸ்டர் நூல் மற்றும் மோனோஃபிலமென்ட்களாக மீள்சுழற்சி செய்கிறது.

2011இல் அதன் மீள்சுழற்சி நடவடிக்கைகளைத் தொடங்கியதிலிருந்து இது 380 மில்லியன் பாட்டில்களை மீள்சுழற்சி செய்துள்ளது.

BPPLஆனது ஆசியாவில் ஒரு சில தூய்மையான சுற்றுச்சூழல், சமூக மற்றும் பெருநிறுவன நிர்வாகம் (ESG) விடயம் சார் நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதுடன், நிலைத்தன்மை குறித்து முக்கிய கவனம் செலுத்துகிறது.

இந்தியா, பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் புதிய சர்வதேச சந்தைகளுக்கு அதன் முழு சொந்தமான துணை நிறுவனங்களான Eco Spindles (Pvt) Ltd மற்றும் Beira Brush (Pvt) Ltd மூலம், இந்தக் குழு மீள்சுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர் நூல், மோனோஃபிலமெண்ட்ஸ் மற்றும் தொழில்முறை மற்றும் வீட்டை சுத்தம் செய்யும் கருவிகளை ஏற்றுமதி செய்கிறது. ‘Tip Top’ பிராண்டின் கீழ், உள்நாட்டில் சில்லறை விற்பனை செய்யப்படும் வீட்டை சுத்தம் செய்யும் தூரிகைகளையும் இந்த குழுமம் தயாரிக்கிறது.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும் நிகழ்வில் தேசிய பசுமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட முதல் மற்றும் ஒரேயொரு பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனம் என்ற விருதினையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

மேலும் 2021ல் உலகளாவிய மீள்சுழற்சி தினத்திற்காக உலகளாவிய மீள்சுழற்சி அறக்கட்டளையினால் ஏற்பாடு செய்த 2021 சர்வதேச மீள்சுழற்சி ஹீரோஸ் விருது வழங்கும் நிகழ்வில் மீள்சுழற்சி செய்யும் ஹீரோக்களில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்தது.

தொற்றுநோய் காலப்பகுதியில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், குழு அனைத்து முக்கிய நிதி அளவீடுகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன் 2020/21 நிதியாண்டையும் முடித்தது. டீPPடுன் ஒருங்கிணைந்த வருவாய் ஆண்டுதோறும் 31% அதிகரித்து 3.4 பில்லியனாக உயர்ந்துள்ளது.

வரிக்குப் பிந்தைய குழு நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 23% அதிகரித்து 497 மில்லியனாக உயர்ந்துள்ளது.

‘Forbes போன்ற சர்வதேச மேடையில் அங்கீகரிக்கப்படுவது மகத்தான சாதனை மற்றும் கௌரவமாகும்.

கொவிட்-19 எங்களுக்கு பல சவால்களை ஏற்படுத்தியது, ஆனால் நாங்கள் அந்த சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஒரு குழுவாக நாங்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைய உழைத்தோம். சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும், BPPL சார்பாக உங்கள் முயற்சிகள் மற்றும் சேவைகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

இது ஒரு கூட்டு வெற்றி!’ என BPPL Holdings PLCஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி அனுஷ் அமரசிங்க கூறினார். ‘எங்கள் நூல் மற்றும் மோனோஃபிலமென்ட் உற்பத்தி வசதிகளை விரிவாக்குவது போன்ற முதலீடுகள் மூலம் இந்த நீண்டகால வளர்ச்சிப் பாதையைத் தொடர முடியுமென நாங்கள் நம்புகிறோம்.

நாங்கள் தயாரிப்பு ஆர்டர்களின் வரிசையை அதிகரிக்கிறோம், எங்கள் தயாரிப்பு வரம்பை பல்வகைப்படுத்துகிறோம், புதிய புவியியல் மற்றும் வாடிக்கையாளர் பிரிவுகளைப் கவர்வதன் மூலம் எங்கள் சந்தைப் பங்கை விரிவுபடுத்துகிறோம்,’ என கலாநிதி அமரசிங்க விவரித்தார்.

BPPL ஹோல்டிங்ஸ் PLC ஆனது கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) சிறப்பாக செயல்படும் பங்குகளில் ஒன்றாகும், ஏனெனில் வெளிநாட்டு கொள்வனவாளர்கள் மத்தியில் முன்னேறி வரும் மற்றும் தீவிரமான ஆர்வத்தைக் கொண்டுள்ளது. தூய்மையான ESG தாக்கம் நிறுவனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதே இதற்கு முதன்மையான காரணம், ஏனெனில் இப்போது மதிப்பு அடிப்படையிலான முதலீடுகளில் கவனம் செலுத்தப்படுகிறது.

மேலும், அந்நிய செலாவணி ஏற்ற இறக்கங்கள் காரணமாக இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் விலை ஏற்ற இறக்கத்துடன், BPPL Holdings, CSEஇல் பட்டியலிடப்பட்டுள்ள மிகச் சில நிறுவனங்களில் ஒன்றாகும், இது அதன் அனைத்து வருவாயையும் USDஇல் உருவாக்குகிறது – அந்நிய செலாவணி நெருக்கடிக்கு ஒரு ஒருங்கிணைந்த தீர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles