போர் உக்கிரம்: ஈரானின் அணுசக்தி தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல்!

இஸ்​ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வரு​கிறது.
இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில், ஈரான் தலைநகர் தெஹ்​ரானில் உள்ள அணுசக்தி தலை​மையகம் தீக்​கிரை​யானது. எண்​ணெய் வயல்​கள் நாச​மாகின.

இது​வரை 140-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். ஈரான் நடத்​திய பதில் தாக்​குதலில், இஸ்​ரேலில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இரு தரப்​பிலும் நூற்​றுக்​கணக்​கானோர் படு​கா​யம் அடைந்​தனர்.

அணுகுண்டு தயாரிப்​பில் ஈரான் தீவிரம் காட்​டிய​தால், அந்த நாட்​டின்​மீது இஸ்​ரேல் விமானப்​படை கடந்த 13-ம் திகதி தாக்​குதல் நடத்​தி​யது.

அன்​றைய தினம், ஈரானின் 4 அணுசக்தி தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. நாட்​டின் மூத்த அணு விஞ்​ஞானிகள் 9 பேர், ராணுவ தளப​தி​கள் 3 பேர் உட்பட ஏராள​மானோர் கொல்​லப்​பட்​டனர்.

இதற்கு பதிலடி​யாக, இஸ்​ரேல் நகரங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் மூலம் அதிதீ​விர தாக்​குதல்​களை நடத்​தி​யது.
இந்த நிலை​யில், இரு நாடு​கள் இடையே நேற்று 3-வது நாளாக போர் நீடித்​தது. இஸ்​ரேல் நகரங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் 150 ஏவு​கணை​களை வீசி​யது.

இதில் பெரும்​பாலான ஏவு​கணை​கள் நடு​வானில் இடைமறித்து அழிக்​கப்​பட்​டன. எனினும், சில ஏவு​கணை​கள் இஸ்​ரேல் பகு​தி​களில் விழுந்​தன.

இஸ்​ரேலின் பாட் யாம் நகரில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பின்​மீது ஈரான் ஏவு​கணை விழுந்து வெடித்து சிதறியது. இதில் 6 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இஸ்​ரேலின் வேறு சில பகு​தி​கள் மீதும் ஏவு​கணை​கள் விழுந்​தன.

இந்நிலையில் இஸ்​ரேலுக்கு எதி​ராக ஒட்​டுமொத்த முஸ்​லிம் நாடு​களும் ஓரணி​யில் திரள வேண்​டும். அப்​போது​தான் இஸ்​ரேலின் சதி​களை முறியடிக்க முடி​யும். அமெரிக்​கா​வின் அழுத்​தத்​துக்கு நாங்​கள் ஒரு​போதும் அடிபணிய மாட்​டோம் என்று ஈரான் ஜனாதிபதி தெரிவித்தார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles