போர் தீவிரமடையும் சாத்தியம்: புதிய பாதுகாப்புபோர் தீவிரமடையும் சாத்தியம்: புதிய பாதுகாப்பு அமைச்சரை நியமித்தது ஈரான் அமைச்சரை நியமித்தது ஈரான்

அமெரிக்காவுடனான போர் மேலும் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சராக மெஹர்தாத் அக்லாகி கெதாப்ச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

68 வயதான இவர், கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து போரை ஆரம்பித்ததிலிருந்து இணையவழியில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தி வரும் ஈரான் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை ஞாயிற்றுக்கிழமை பெற்றார்.

ஈரானின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஆயுதப் படைகளுக்கான தளவாடப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள இவரது நியமனத்துக்கு ஆதரவாக 237 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததுடன், 15 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

போரின் முதல் நாளில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அசீஸ் நசீர்சாதே உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகளும், ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியும் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, பாதுகாப்பு அமைச்சரின் பொறுப்பு தற்காலிகமாக மஜீத் எப்ன்-இ ரேசாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது அக்லாகியின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஈரானின் இராணுவத் தொழில்துறை உட்கட்டமைப்பை மீளக் கட்டியெழுப்புவதும், அதன் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதும் புதிய அமைச்சரின் முக்கிய பொறுப்புகளாக அமையும்.

புதிய பாதுகாப்பு அமைச்சரின் பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஏற்கெனவே உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மற்றும் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரக் கொள்கைக்கான குழு ஆகியவை ஒப்புதல் வழங்கியுள்ளன.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், எந்தவொரு நாட்டின் மீதும் ஆக்கிரமிப்பைத் தொடங்கும் நாடாக இஸ்லாமியக் குடியரசான ஈரான் இருக்காது எனக் குறிப்பிட்டார்.

அதேவேளை, எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிராக நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் ஈரான் உறுதியுடன் செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய பாதுகாப்பு அமைச்சர் மெஹர்தாத் அக்லாகி கெதாப்ச்சி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் 42 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர் என்றும் ஜனாதிபதி பெசெஷ்கியான் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles