போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த அறிவிப்பை ஈரான் நிராகரித்துள்ளது.
இரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன. 6 மணி நேரத்திற்கு பிறகு ஈரானும், 12 மணி நேரத்திற்கு பிறகு இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அமுல்படுத்தும்.
24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் முழுமையாக அமுலுக்கு வரும் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்த அறிவிப்பை ஈரான் நிராகரித்துள்ளது.
இது குறித்து, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி கூறியதாவது: இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் அமுலுக்கு வரவில்லை. போர் நிறுத்தம் தொடர்பாகவோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடர்கிறது.
தற்போது வரை இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி கொண்டு தான் இருக்கிறோம். இஸ்ரேல் தான் போரை நிறுத்த வேண்டும்.
போர் நிறுத்தம் குறித்து இறுதி முடிவை இன்னும் எடுக்கவில்லை. தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்த தயார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமருடன் ஜனாதிபதி டிரம்ப் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ள வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான் நாட்டின் தலைவர்களுடன் கத்தார் நாட்டின் தலைவர்கள் நேரடியாக பேசி போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ள வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரான் தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்திக் கொள்வோம் என்று இஸ்ரேல் பிரதமரும், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்திக் கொள்வோம் என்று ஈரான் வெளியுறவு அமைச்சரும் உறுதி அளித்துள்ளனர்.
எனினும் இரு நாட்டினரும் இது பற்றி வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை. இதனால் போர் நிறுத்தம் அமுலுக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.