இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கிடையிலான போர் நிறுத்தம் மேலும் ஒரு நாளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்புக்கும் இடையிலான 4 நாட்கள் போர் நிறுத்தம் கடந்த 27 ஆம் திகதி முடிவுக்கு வந்த நிலையில், போர் நிறுத்தத்தை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்க இஸ்ரேல்-ஹமாஸ் சம்மதம் தெரிவித்தன.
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு அமைய நேற்று முன்தினம் 9 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி என 10 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். இஸ்ரேலில் இருந்து 30 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நீட்டிக்கப்பட்ட 2 நாட்கள் போர் நிறுத்தத்தின் கடைசி நாளான நேற்றும் பணய கைதிகள் மற்றும் கைதிகளை விடுவிப்பதில் இருதரப்பும் மும்முரம் காட்டின. 6-வது கட்டமாக ஹமாஸ் 10 பணய கைதிகளையும், இஸ்ரேல் 30 பாலஸ்தீன கைதிகளையும் விடுதலை செய்தன.
2 நாட்கள் போர் நிறுத்தம் இன்று முடிவுக்குவரும் நிலையில், அது மேலும் ஒரு நாளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.










