சிறுவர்களை பௌத்த பிக்குகளாக இணைத்துக்கொள்வதற்கான வயதெல்லை தொடர்பில் ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் கடந்த நாட்களில் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க பீடங்களிடம் கலந்துரையாடியதாகவும் , மேலும் அது தொடர்பான செயற்பாட்டுக் குழுவுடனும் கலந்துரையாடி தீர்மானமொன்றை பெற்றுக்கொள்வதே சிறந்ததென மகாநாயக்க பீடங்கள் வலியுறுத்தியதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.