துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பௌத்த பிக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் உள்ள விகாரையொன்றில் இருந்த தேரரே இன்று இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
காரொன்றில்வந்த இனந்தெரியாத நால்வர், துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தேரர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துவருகின்றனர்.
