சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து, அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்து, நிவாரணப் பொருட்களை வழங்கிவைத்துள்ளார் இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்.
டிக்கோயா, பொகவந்தலாவ, அக்கரபத்தனை ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரன பொதிகள், முதற்கட்டமாக நேற்று வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துக் கொடுக்குமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
இதொகாவின் பிரதி தலைவர் அனுஷா சிவராஜா, போசகர் சிவராஜா, தொழிற்சங்கபிரிவு தேசிய அமைப்பாளர் லோகதாஸ், உபத்தலைவர் சச்சுதானந்தன் காரியாலய உத்தியோகஸ்த்தர்கள் உட்பட பலர் பொதுச்செயலாளருடன் சென்று மக்களை சந்தித்தனர்.