‘மக்களுக்காக தியாகம் செய்த தயார்’ – மஹிந்த

” நாட்டு மக்களுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்வதற்கு தயார்.”

இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர் பதவி விலகக்கூடாது என வலியுறுத்தியும் அலரிமாளிகைக்கு முன்பாக இன்று போராட்டம் இடம்பெற்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களாலேயே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய மஹிந்த,

” சவால்களில் இருந்து ஓடிவிடமுடியாது. அரசியல் காரணங்களுக்காக ஒரு சிலர் மேற்கொள்ளும் திட்டங்களுக்கமைய செயற்பட்டு அரசியலமைப்பை மீறமுடியாது. சர்வகட்சி அரசுக்கான ஏற்பாட்டை ஜனாதிபதி செய்யலாம். அதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க நான் தயார். மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார்.ஆனால் 69 இலட்ச மக்களின் ஆணையை மீறும் எந்த செயலுக்கும் எங்களால் உடன்படமுடியாது.” ” – என்றார்.

Related Articles

Latest Articles